கடைக்குள் புகுந்த பேருந்தால் ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கடைக்குள் புகுந்த பேருந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி இரண்டு பேர் படுகாயம்.
Update: 2024-01-18 09:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி பலியாலினார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.பிரேக் பிடித்த போதும் கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பஸ் கடைக்குள் புகுந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் பல பேருந்துகளில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை. அவர்களின் சாமர்த்தியமான பணியால் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ் டிரைவர் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என பலமுறை கூறியும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களையும் சோதனை செய்து சரியான உதிரிபாகங்கள் பொருத்தி இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.