குட்கா விற்றது ஒரு கடை, அதிகாரிகள் பூட்டியது வேறு கடை - சர்ச்சை

Update: 2023-12-01 04:27 GMT

பூட்டப்பட்ட கடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் குட்கா விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உதவி எஸ்.பி ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சோதனை மேற்கொண்டு குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கும் பதிவு செய்தனர். இந்நிலையில் போலீசாரின் பரிந்துரையின் பேரில் அந்த கடையை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் சென்றனர். ஆனால் குட்கா விற்ற கடையை விட்டுவிட்டு அருகே போலியாக அமைக்கப்பட்டிருந்த கடையை மூடினர். அதிகாரிகள் மூடிய கடையில் இட்லி சட்டி, அண்டா, வாளி, சிலிண்டர் அடுப்பு மட்டுமே பெயருக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த கடை பல மாதங்களாக செயல்படாத உணவகம் போல இருந்துள்ளது. போலீசார் கூறிய கடையை விட்டுவிட்டு போலியாக அமைக்கப்பட்ட கடையை அதிகாரிகள் மூடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News