ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.21 லட்சம் பணம் மோசடி
ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 10:20 GMT
பணம் மோசடி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் பெங்களூருவில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது செல்போனுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பி அவர் தனது விலாசத்தை பதிவு செய்தார். பின்னர் சில விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தது போல் அவருக்கு குறுஞ்செய்தியும் அதற்கான கமிஷன் தொகையும் வந்து உள்ளது. பின்னர் சில நாட்களில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்து உள்ளது. இதை நம்பி அவர் சில தவணைகளில் ரூ.21 லட்சத்து 29 ஆயிரத்து 749 முதலீடு செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. மேலும் கட்டிய பணமும் வரவில்லை. சில நாட்களில் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அப்போது பணம் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிந்தது. இது குறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோசடி செய்யப்பட்ட பணம் ஒடிசா, ராஜஸ்தான், சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 2 தனியார் வங்கியில் வரவு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். பின்னர் மோசடி செய்யப்பட்ட ரூ.21 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.