குமரியில் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் மனு

குமரியில் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-21 04:13 GMT

 குமரியில் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முதல் நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.      மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்றது.     

இந்த நிலையில்  முதல் நாளாளர் நேற்று ஏராளமானோர் வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான படிவங்களை பெற்று சென்றனர்.        இதில் சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் மட்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு  தாக்கல் 27ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 28ஆம் தேதி  பரிசீலனையும் 30ஆம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெறவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.      

அதே போன்று விளவங்கோடு  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நேற்று யாரும் வேட்பு மனு செய்யவில்லை.  நான்கு பேர் மட்டும்  வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களை மட்டும் பெற்று சென்றதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News