ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாள் ரத்து.
ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாள் ரத்து.;
By : King 24x7 Website
Update: 2023-12-21 07:55 GMT
ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாள் ரத்து.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மேக மூட்டமும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு அருகே மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை வரும் மலைரையிலும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. தற்போது சீரமைக்கும் பணி நிறைவடையாததால் மலை ரயில் சேவை இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.