ஊட்டியில் குதிரை பந்தயம்!

ஊட்டியில் புகழ்பெற்ற 2000 கின்னீஸ் குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2024-04-22 10:32 GMT

குதிரை பந்தயம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீஸனின் போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வகையில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி‌ (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு 137வது குதிரை பந்தயம் ஊட்டியில் கடந்த 6ம் தேதிதொடங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று புகழ் பெற்ற 2000 கின்னீஸ் பந்தயம் நடைபெற்றது. மொத்தம் நடந்த 6 போட்டிகளில் 4-வதாக இந்த பந்தயம் தொடங்கியது.

மொத்தம் 9 குதிரைகள் கலந்து கொண்டன. மூன்று வயதுக்கு உட்பட்ட குதிரைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில், ஒரு நிமிடம் 27 நொடிகளில் ஓடி பாரத் குதிரை வெற்றி பெற்றது.

இதன் பயிற்சியாளராக பிரசன்ன குமார், ஜாக்கி உமேஷ் ஆகியோருக்கு பாராட்டு. தெரிவிக்கப்பட்டது குதிரையின் உரிமையாளருக்கு ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இதேபோல் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு உற்சாகமூட்டினார். முன்னதாக போட்டிகளில் இந்த குதிரை பந்தயத்தில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஊட்டியில் குதிரை பந்தயம் ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.

Tags:    

Similar News