ஊட்டி டூ தஞ்சாவூர்... புதிய அரசு பஸ் சேவை துவக்கம்
ஊட்டி - தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அரசு பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-22 14:52 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து தஞ்சாவூர் பகுதிக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் உதகையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உதகையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூர் பகுதிக்கு புதிய பேருந்தை இன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.