உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு
திருத்தணியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 17:35 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டில் தனியார் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த 2020-இல் 5.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுக்கு சொந்தமான நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், சதீஷ்குமார், முகமது ஷபிக் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.