காஞ்சிபுரத்தில் நீதிமன்றங்கள் திறப்பு
முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் திறப்பு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலை வகித்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதன்மை நீதிபதி மேவிஸ்தீபிகா சுந்தரவதனா வரவேற்றார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு குற்றவியல் தலைமை நீதிபதி ஜெயாஸ்ரீ நன்றி கூறினார்."