விழு‌ப்புர‌ம் காவல் துறை சார்பில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு

விழு‌ப்புர‌ம் காவல் துறை சார்பில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது.

Update: 2024-03-28 16:07 GMT

எஸ்பி அலுவலகம்

விழுப்புரம் பாராளுமன்ற தேர்தல்-2024-ஐ முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் அலுவலகத்தில் 24X7 என்ற சுழற்சி முறையில் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் அலுவலர்களைக் கொண்டு தேர்தல் கட்டுபாட்டு அறை இயங்கி வருகிறது.

தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு என பிரத்தியேகமாக 89255-33710, 89255-33810 ஆகிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு தேர்தல் விதி மீறல்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் சம்பந்தமாக வதந்தி செய்திகள், தவறான தகவல்களை குறுஞ்செய்தி (SMS) வழியாகவோ. சமூக ஊடகங்களின் வழியாகவோ பரப்புபவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். தேர்தல் சம்பந்தமாக தேர்தல் விதிமுறைகள் பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் ஒத்துழைப்பு அளித்திடுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News