கீழமணக்குடியில் புதிய மீன் இறங்குதளம் திறப்பு

மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர்  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 16:28 GMT
கலெக்டர் குத்துவிளக்கேற்றி துவக்கினார்

குமரி மாவட்டம், கீழ மணக்குடி பகுதியில்  மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு  சுமார் 2 ஆயிரத்து 620 -க்கும் மேற்ப்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 12 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளும், 56 நாட்டு படகுகளும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மீனவர்கள் மீன் இறங்குதளம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அரசு கீழமணக்குடி கிராமத்தில் ரூ.29.5 கோடி மதிப்பில்   மீன் இறங்குதளம் அமைத்துள்ளது. இதை   காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கடல் அரிப்பு துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன்,  மீன்வளத்துறை துணை இயக்குனர் திரு.சின்ன குப்பம், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News