ராமநாதபுரம் : புதியதாக கட்டிய மீன் கடைகள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் புதிதாக கட்டிய மீன் கடைகளை நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.

Update: 2024-01-22 02:18 GMT

புதிய மீன்கடை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மீன் கடை கட்டிடங்கள் தற்சமயம் மிகவும் சேதம் அடைந்து மேற்குறைகள் அடிக்கடி பெயர்ந்து விழத் தொடங்கின. இதனையடுத்து, நாட்டுப்படக .மீன் வியாபாரிகள் சங்க கௌரவ தலைவர் முனியசாமி மற்றும் மீனவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதாவிடம் மீன் கடை கட்டிடங்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது.

இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்சமயம் மீன் கடைகளை கட்டிடங்களை விரைவில் இடிக்கும் பணி தொடர உள்ளதாகவும் புதிய மீன் கடைகள் கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். மேலும் ,தற்காலிகமாக மீன் கடைகள் விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கவளாகத்தில் துவங்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை நகர்மன்ற தலைவர். செஹானாஸ் ஆபிதா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத் தலைவர் முருகானந்தம் வர்த்தக சங்கத் தலைவர் சையது சகுபர் சாகுனி வர்த்தக சங்கத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினார். திமுக நகச் செயலாளர் பசீர் அகமது அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாட்டுப் படகு மீன் வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும், இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீத் .6வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பைரோஸ் பாத்திமா அனைத்து சமுதாய கூட்டமைப்பு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் உசேன் மற்றும் பொதுமக்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாட்டுப்புற மீன் வியாபாரிகள் சங்க தலைவர் பாலமுருகன் செயலாளர் குமார் ஆகியோர் வரவேற்றனர். நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சூரியகலா மகாலிங்கம் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News