ஆலங்குளம் அருகே பேவா் பிளாக் சாலைகள் திறப்பு

புதுப்பட்டி அம்பேத்கா் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலைகளின் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-12-25 06:56 GMT

பேவர் பிளாக் சாலை 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் உள்ள அம்பேத்கா் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 3 பேவா் பிளாக் சாலைகள் திறப்பு விழா நடைபெற்றது. 2019-20ஆம் ஆண்டுக்கான கனிமம்- சுரங்கம் நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 28.75 லட்சத்தில் இவை கட்டப்பட்டுள்ளன. விழாவுக்கு, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து, சாலைகளைத் திறந்துவைத்தாா். புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பால்விநாயகம், துணைத் தலைவா் வேல்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News