அரசு போக்குவரத்து துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு
போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பெட்ரோல் பங்கை திறந்து வைத்து,ராமேஸ்வரம் சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புறநகர் பணிமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் தரிசனம் செய்வதற்கும், பக்தர்களின் சுற்றுலா வசதிகளுக்காக சுற்றுலா சிறப்பு சுற்று பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராமேஸ்வரம் பகுதியில் தனியார் வாகனங்கள் கட்டணம் அதிகம் வசூலிப்பதால் பக்தர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், அக்னி தீர்த்தம், லட்சுமண தீர்த்தம்,ராமர்பாதம், உள்ளிட்ட 9 முக்கிய இடங்களான சுற்றுல்லா பகுதிகளுக்கு சென்று பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த போக்குவதற்கு திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு,
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பிற அரசு அலுவலர்கள்,மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.