கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் கோடைகால நீர்மோர் பந்தல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகளுடன் கூடிய நீர் மோர் வழங்கினார்.;
Update: 2024-04-28 12:29 GMT
தண்ணீர் பந்தல்
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சமயபுரம், மண்ணச்சநல்லூர் கடைவீதி, திருவெள்ளறை, ஆமூர் உள்ளிட்ட பகுதிகளில், கோடைகால நீர் மோர் பந்தல்களை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகளுடன் கூடிய நீர் மோர் வழங்கினார் திருச்சி, சமயபுரம், ச.கண்ணனூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், பேரூராட்சி செயலாளர்கள் சம்பத், துரைசக்தி ஆகியோரது ஏற்பாட்டில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளும், இளநீர், ஜூஸ் வகைகள், நீர்மோர் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.