வாக்குப்புதிவு இயந்திர அறைகள் திறப்பு!
ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திர அறைகள் வாக்கு எண்ணிக்கைகாக திறக்கப்பட்டது.;
Update: 2024-06-04 03:55 GMT
வாக்குப்பதிவு இயந்திர அறை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு ,வாக்கு பதிவு இயந்திர அறைகள் திறக்கப்பட்டது. அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர் .