பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோளாறு அணைகளில் இருந்து விவசாய பாசனத்திற்காக 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் 42 அடி முழு கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணைகள் அமைந்துள்ளது. இந்த இரு அணைகளை நம்பி சும்மா 40-க்கும் மேற்பட்ட கண்மாய்களும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களும் பயன்பட்டு வருகின்றன.
பிளவக்கல் பெரியாறு அணையில் தற்போது 26 அடி தண்ணீரும், கோவிலாறு அணையில் 36 அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. பிளவக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 8.53 கன அடி நீரும்,கோவிலாறு அணைக்கு 4.13 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.தற்பொழுது இரண்டாம் போக பாசனத்திற்காக இரு அணைகளில் இருந்தும் இன்று முதல் 6 நாட்களுக்கு கோவிலாறு அணையில் இருந்து 100 கன அடியில்,
பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து 50 கன அடி வீதம தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால்பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 5 கண்மாய்களின் 926 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையுள்ளன.இதன்மூலம் கொடிக்குளம், , வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய நான்கு வருவாய் கிராமங்கள் பயனடைய உள்ளது.
விவசாயிகள் அனைவரும் அதிக மகசூலை பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.