ஆண்டாள் கோவிலில் கடைகளை அகற்ற எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கடைகளை அகற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..
தமிழகத்தின் முத்திரை சின்னமாக விழங்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய இந்த கோவிலுக்கு முகப்பு பகுதியில் இருந்து இரண்டு புறங்களில் கடைகள் அமைப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டாள் கோவில் வளாகத்தில் ராமர் என்பவர் பிரசாத கடைகள் அமைக்க உரிமை பெற்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் பிரசாதம் விற்க வேண்டும் அதனை மீறி கோவில் வளாகத்தில் பிரசாதங்கள் விற்கக் கூடாது என்று அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் அகற்ற மறுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.இதனால் கோவில் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முப்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இதை தொடர்ந்து அதிகாரிகள் கடையை அப்புறப்படுத்தினர்.