ஒரே டிக்கெட்டில் பயணம்; செயலியை உருவாக்க ஆணை!!
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் பயன்படுத்துவற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-09 04:51 GMT
Chennai 3 types of Transport
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் பயன்படுத்துவற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. செயலியை உருவாக்க Moving Tech Innovation Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.