ஒரு லட்சத்துக்கு மேலாக பணம் எடுப்போரின் தகவல்களை தெரிவிக்க உத்தரவு

தனிநபரின் வங்கி கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரிவர்த்தனை இருந்தால் அதுகுறித்து அறிக்கையினை தினமும் அனைத்து வங்கியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது.

Update: 2024-03-18 11:41 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் –2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்.... தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளதால் வங்கிகளில் தனிநபரின் வங்கி கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரிவர்த்தனை இருந்தால் அதுகுறித்து அறிக்கையினை தினமும் அனைத்து வங்கியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்குகள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்களை அனைத்து வங்கிகளின் கிளைகளைச் சார்ந்த வங்கியாளர்கள் கண்காணித்து, தினசரி அறிக்கையினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம்(கணக்கு) சமர்ப்பிக்க வேண்டும். வங்கியில் ரூ.1.00 இலட்சத்துக்கு மேலாக பணம் எடுப்போரின் தகவல்களை வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும். அதுபோல், ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் உரிய சான்றுகளுடன் முகவர்களின் முழு தகவல்கள், வாகனங்களின் எண் உள்ளிட்ட விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கில் இருந்து வழக்கத்துக்கு மாறாக பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றமானது சந்தேகப்படும் வகையில் இருந்தாலும், ரூ.10.00 இலட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தாலும், வருமான வரித்துறை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்கள் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ந.சிவக்குமார் (தேர்தல்கள்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News