உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-09 08:50 GMT

ஆண்டு விழா கொண்டாட்டம் 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தனியார் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தி மாணவ மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆடல் பாடல் பேச்சுப் போட்டி என கலைத்திருவிழா அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழாக்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அதன்படி திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 20 நகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார். தொடர்ந்து மலை  அடிவாரம் நடுநிலைபள்ளி, ராஜா கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளி, சட்டையன்புதூர் துவக்கப்பள்ளி,ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தப் பட்டது.

இவ்வாறு நடத்தப்படுகிற ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு 200 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2500 ரூபாயும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் 5000 ரூபாயும் 500க்கும் மேல் மாணவர்கள் இருந்தால் 8000 ரூபாயும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது தனியார் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்து ஆண்டு விழாக்களை நடத்த உத்தரவிட்டிருப்பது பள்ளி பெற்றோர்கள் இடையேயும் மாணவர்கள் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News