உடல் உறுப்பு தானம் - உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் .ஈரோடு RDO நேரில் அரசின் சார்பில் அஞ்சலி

Update: 2023-12-10 17:35 GMT

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் .ஈரோடு RDO நேரில் அரசின் சார்பில் அஞ்சலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியைச் சார்ந்த ராசு என்பவர் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவரது உடல் உறுப்புகளை அவர் குடும்பத்தினர் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News