உடல் உறுப்பு தானம் : இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை
விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த பள்ளிபாளையம் இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் கணபதி ஆகாஷ் வயது 23 டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். ஈரோட்டில் காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார் .மேலும் பகுதிநேர பிஈ படிப்பு படித்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்னை விழுப்புரத்தில் நேற்று முன்தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார்.
அப்பொழுது ரோட்டை கடக்கும் பொழுது நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த அடி ஏற்பட்டதில் ,சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென மூளை சாவு ஏற்பட்டது. இந்நிலையில் பெற்றோரின் விருப்பப்படி கணபதி ஆகாசின் கிட்னி, இதயம் ,கண்கள், உள்பட உடல் உறுப்புகள் தானமாக மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து உடல் ஞாயிறன்று தாஜ்நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அரசு மரியாதை செய்தார்.அதன் பிறகு கணபதி ஆகாசின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது