உடல் உறுப்பு தானம் - ஆர்டிஓ அரசு மரியாதை
விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தமிழக அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்;
Update: 2024-03-18 03:48 GMT
அரசு மரியாதை
மயிலாடுதுறை வட்டம் பட்டமங்கலம் கிராமம் பாரதியார் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த சதீஷ்குமா (வயது 43) என்பவர் மூளை சாவு அடைந்து நேற்று முன்தினம் (16/3/2024) சென்னையில் இறந்துவிட்டார். இறந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இறந்த நபரின் உடலுக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். மயிலாடுதுறையில் உடல் உறுப்பு தானம் அளித்து அரசு மரியாதை செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சி இதுவாகும்.