உடல் உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இறந்தவர் உடலுக்கு கலெக்டர் மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-05-01 05:29 GMT
அரசு மரியாதை செலுத்தும் ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி 40 விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தமிழ்ச்செல்வியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.