துறையூர் அருகே வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு அங்கக வேளாண் பயிற்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே த.முருகப்பட்டி கிராமத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளுக்கு அங்கக வேளாண் குறித்து பயற்சி அளித்த விவசாயி.

Update: 2024-05-09 14:49 GMT

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக உப்பிலியபுரம் அருகே த.முருகப்பட்டி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் தோட்டத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் அங்கக வேளாண் பயிற்சி பெற்றனர்.

மேலும் விவசாயி பிரபாகரனிடன் அங்கக வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் குறித்த செய்முறை விளக்கமும் பெற்றனர் மற்றும் விவசாயி தோட்டத்தில் நடவு செய்ய பட்ட சீதாப்பழச்செடிகளில் மகரந்த சேர்க்கை செய்வது பற்றியும் அறிந்து கொண்டனர். 

 இந்த பயிற்சியில் மாணவிகள் அனுஷா,அபிராமி, ஆக்லின் செரின்,அலமேலு,அனுஷா, அர்ச்சனா, ஆர்த்தி, அருந்ததி,அஷ்வினி, பைரவி அகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News