நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி
சத்துவாச்சாரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் மத்திய அரசு திட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.;
Update: 2023-12-22 11:32 GMT
Vellore
Vellore
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் மத்திய அரசு திட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவ முகாம், வங்கி சார்பில் நிதி உதவி திட்டம், தபால் துறை மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம், மற்றும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் முகாம்களும் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும்,சிலரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ததாகவும் மருத்துவர் பரமேஸ்வரி கூறினார்.