வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 10:10 GMT
வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா, போலீசார் வனராஜன், ஜஸ்டின் பால்ராஜ் ஆகியோர் வக்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடைபாறைப்பட்டி கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 24)என்பது வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ 940 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.