கழிப்பறை வசதியுடன் நியாய விலை கடைக்கு சொந்த கட்டிடம்
மயிலாடுதுறையில் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்ட நியாய விலை கடையை எம்.எல்.ஏ ராஜகுமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் அப்பகுதியை சேர்ந்த 687 குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் நீண்ட வருடங்களாக இயங்கி வந்தது. பல ஆண்டுகளாக நிரந்தரக் கட்டிடம் வேண்டும் என்று கேட்டுவந்தனர் இந்நிலையில், அந்த வார்டு உறுப்பினர் கீதாசெந்தில்முருகன் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தமது தொகுதி மேம்பாட்டுதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தார் .
அதற்கான கட்டிடம் தருமபுரம் சாலை ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி பகுதியில் கட்டப்பட்டது, அந்த க்கட்டிடத்துடன், வேறு எந்த ரேஷன் கடையிலும் இல்லாத வகையில் கடைக்குவரும் குடும்ப அட்டதார்களூக்கு வசதியாக கழிப்பிட வசதியும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமை வகித்தார், மாயூரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளர் ராஜேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் கட்டிடத்தின் கல்வெட்டை நகர்மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ்திறந்து வைத்தார். நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.