கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் போராட்டம்

மதுரையில் 100க்கு மேற்பட்ட கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2024-07-01 09:23 GMT

 மதுரையில் 100க்கு மேற்பட்ட கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரையின் மையப் பகுதியாக உள்ள டவுன்ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றியிலும் சுமார் நூற்றுக்கும் அதிகமான கடைகள் வாடகைத்தார்களாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதாகவும் அவற்றை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டது. இதனை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை நடத்தி கடை உரிமையாளர்களுக்கு மாற்று வாழ்வாதார பயன்களை ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாகவும், இந்த நிலையில் தற்போது வரையில் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் தற்போது கடைகளை அடைத்து சீல் வைக்க கோவில் நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை மாநகர் காவல் துறையினர் 70க்கும் மேற்பட்டோர் தற்போது இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News