மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மீண்டும் கடைகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மீண்டும் கடைகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-08 12:33 GMT

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மீண்டும் கடைகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைக்காரர்கள் சங்கம் சார்பாக தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கோவில் கடைக்காரர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அறநிலையத்துறையில் பரிந்துரையின்படி முன்னுரிமை வழங்கி கடந்த 24.01.2022 அன்று நடைபெற்ற ஏலத்தில் தரைதளத்தில் 52 கடைகள் ரூபாய் ஆறு லட்சம் டெபாசிட் தொகை செலுத்தி மதுரை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் புராதான பொருட்களை விற்கும் கடைகள் அனைத்தும் முழுமையாக கட்டிடப் பணிகள் முடிவடைந்து விட்டது.

விரைவில் புராதான பொருட்களை விற்கும் கடைகள் திறந்து வியாபாரம் செய்ய ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்

Tags:    

Similar News