ஓயாமரி மயானம் 3 நாள்களுக்கு மூடல்
திருச்சி மாநகராட்சி 15 ஆவது வாா்டிலுள்ள ஓயாமரி மயானம் ஜூன் 3 முதல் 5 வரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
Update: 2024-06-02 07:11 GMT
திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்ட அறிவிப்பு: ஓயாமரி மயானத்தில் உடல்களை எரியூட்டுவதற்கான நவீன தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதனால் ஓயாமரி மயானம் 3 நாள்களுக்கு செயல்படாது. ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா், கோணக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைகள் தொடா்ந்து செயல்படும் எனத் தெரிவித்தாா்.