வைகாசி அமாவாசை : மாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு

திருப்பத்தூர் அருகே வைகாசி அமாவாசையை முன்னிட்டு பாச்சல் கிராம மாரியம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-06 02:30 GMT
 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார் இந்நிலையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது இந்த விழாவில் பம்பை இசை முழங்கமயிலாட்டம்-மாடாட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News