பேச்சிப்பறை அணை மூடப்பட்டது

பேச்சிப்பறை அணையில் ஷட்டர் மற்றும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

Update: 2024-05-28 15:25 GMT

பேச்சிப்பறை அணையில் ஷட்டர் மற்றும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.


குமரியில் கடந்த 10 நாளாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவில் மீண்டும் இடி மின்ன லுடன் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகு திகளிலும் மழை காணப் பட்டது. இன்று காலை வரை விடிய விடிய பல் வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. அதிக பட்சமாக பேச்சிப்பாறை யில் 52.8 மி.மீ மழை பெய் திருந்தது.பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் மறுகால் ஷட்டர்கள் வழியாக திறந்துவிடப்பட்டு நேற்று நிறுத்தப்பட்டது.

கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று அதுவும் நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டுள்ளது.மேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது. இந்தநிலை வரும் மே 31ம் தேதி வரை காணப்ப டும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பி டிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News