வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்த பிஏசிஎல் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் (பி.ஏ.சி.எல்) நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் தேர்தல் புறக்கணிக்க போவதாக கோரிக்கை மனு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை புகார் பெட்டியில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-10 07:46 GMT

பி.ஏ.சி.எல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

இந்தியா முழுவதும் இயங்கி வந்த பி.ஏ.சி.எல் (PACL) தனியார் நிதி நிறுவனத்தில் தமிழகத்தில் பல லட்சம் பேர் ரூ.10ஆயிரம் கோடி கணக்கில் முதலீடு செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு செபி தானாக முன்வந்து எடுத்த நடவடிக்கையால் உச்ச நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு முதல் பி.ஏ.சி.எல் நிறுவனம் செயல்பட தடை விதித்தது. மேலும் ஆறு மாத காலத்திற்குள் முதலீட்டாளர்களுக்குத் தொகையை வழங்குவதற்கு உத்தரவிட்டது.

ஆனால் எட்டு வருடங்கள் ஆகியும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. மேலும், தங்களுடைய முதலீட்டு பணத்தை மீட்டுத் தர எந்த அரசியல் கட்சிகளும் முன்வராததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பி.ஏ.சி.எல் முதலீடாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் விவசாய முன்னேற்ற கழக தலைவர் ஆலோசனையின்படி பி.ஏ.சி.எல் மூத்த கண்காணிப்பு மேலாளர்கள் நடராஜன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை ஒப்படைக்க சென்றனர். தேர்தல் விதிமுறை காரணமாக மனுக்கள் பெற முடியாது என்று ஆட்சியர் தெரிவித்ததையடுத்து மனுக்களை புகார் பெட்டியில் அளித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News