மாடியில் இருந்து தவறி விழுந் பெயின்டர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு பகவதிபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந் பெயின்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-13 08:13 GMT
பைல் படம்

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே வடக்கு பகவதிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (66). இவர் சம்பவ தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயின்டிங் வேலைக்கு சென்றுள்ளார். மாடியில் நின்று வேலை செய்யும் போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.     

இதில் படுகாயமடைந்தவரை சக பணியாளர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் முதலுதவிக்கு பின்,  சிகிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருப்பசாமி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.     

 இது தொடர்பாக கருப்பசாமி மனைவி முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News