பொதுமக்களுக்கு பழநி நகராட்சி அறிவுரை

Update: 2023-12-25 07:07 GMT

தண்ணீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும் 

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது. நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ தரம் உள்ளதாகவும் 32% குளோரின் அளவு கண்டிப்பாக உள்ளதா என நகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் வயிற்றுபோக்கு, வாந்திபேதி, காய்ச்சல் போன்ற குடிநீர் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென பழநி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News