பாலாறு குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர்

பாலாறு குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-04 01:57 GMT

பாலாறு குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் 70 வார்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பாலாறு குடிநீர் திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டம் வாயிலாக தினம் 123 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 4வது மண்டலம் மேற்கு தாம்பரம், 5வது மண்டலம் கிழக்கு தாம்பரத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பாலாற்றில் இருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.

இதில், மேற்கு தாம்பரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான குடிநீர் வெளியேறி, சாலையில் ஆறு போல் ஓடியது. தகவலறிந்த தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News