கும்பாபிஷேக விழாவையொட்டி பால்குட ஊர்வலம்

தர்மபுரி மாவட்டம், தேங்காமரத்துப்பட்டியில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைப்பெற்ற தீர்த்தகுடம்-பால்குடம் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-20 10:40 GMT

பால்குட ஊர்வலம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட தேங்காமரத்துப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோயில். இக்கோயில் திருப்பணிகள் பல லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, இதன் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி பக்தர்களுக்கு கங்கணம் கட்டி, விழா கொடியேற்றுடன் துவங்கியது.

இன்று திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்ட, தீர்த்தகுடம், பால்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் அழைப்பு நிகழ்ச்சி பம்ப வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடந்தது. இந்த ஊர்வலமானது, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, கும்பாபிஷேகம் நடைபெறும் கோயிலை வந்தடைந்தது.

22-ஆம் தேதி காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள், தீர்த்தகுடம் அழைக்கப்பட்டு, கோயில் விமான கோபுர கலசங்களுக்கு, புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் நடத்தி வைக்க உள்ளனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News