பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-10-29 01:03 GMT

ஆற்றில் கிடந்த சடலம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதி வழியே சென்ற சிலர் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் யார்? மற்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் இதேபோல ஈரோடு எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண் சடலங்கள் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News