மேம்பால பணிகளால் கலை இழந்த பள்ளிபாளையம் சாலைகள்

பள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கத்துக்காக மேம்பால பணிகள் நடப்பதால், தற்காலிக கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-01-13 09:43 GMT

பள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கத்துக்காக மேம்பால பணிகள் நடப்பதால், தற்காலிக கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறு மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒவ்வொரு விசேஷ நாட்களின் போதும், சாலையோர வியாபாரிகள், பள்ளிபாளையம் பிரதான சாலை மற்றும் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரத்தை கவனிப்பர்.

அதேபோல பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் கரும்பு விற்பனை செய்யும் கடைகள், பூ வியாபாரம் செய்யும் கடைகள், பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு தரப்பட்ட கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படும். தற்போது மேம்பால அமைக்கும் பணிகள் காரணமாக, கடைகளை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சாலையோர கடை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News