வேலை நிறுத்த போராட்டம் குறித்து துண்டு பிரசுரம்
மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம் மறியல்
Update: 2024-02-16 07:18 GMT
மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட தொ.மு.ச பேரவை கவுன்சில் தலைவர் அழகர்சாமி, போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் பொன் செந்தில், தலைவர் மணிவேல், பொருளாளர் மணிகண்டன் உட்பட தொழிலாளர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் தொழிலாளர்கள் ஆதரவை கேட்டு வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வழங்கினர்.