பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து 3வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-05-03 11:49 GMT

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து 3வது நாள் உண்ணாவிரத போராட்டம் நாகூர் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள்,

விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின் படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல். நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும்.

மூன்று கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம், சிறுநங்கை கிராமங்களில் விவசாய கூலித்தொழிலாளர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளர்கள்,

குத்தகைத்தாரர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் 3 -வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி மற்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைவர் அனந்தகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அங்கு செய்திகளிடம் பேசிய ஈசன் முருகசாமி கூறியதாவது,

சி.பி.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டபோது நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமை தாரர்களுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் இழப்பீடு தொகை அந்நிறுவனத்தில் பணி உள்ளிட்டவை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அங்கு ஏமாற்றப்பட்டதாகவும் இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில் அதையும் மீறி சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு நிலம் கையக படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மற்றும் சாகுபடி தாரர்கள்,கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,தமிழக முதல்வர் சி.பி.சி.எல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் பனங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்மணிக்கு மயக்கம் மற்றும் வலுப்பு ஏற்பட்டது. உண்ணாவிரத போராட்ட பந்தலில் பதட்டம் ஏற்பட்டது.

Tags:    

Similar News