பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் எண்ணை ஆலை நிறுவனம் உள்ளது. ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு 620 ஏக்கர் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியது.
நிலம் கையகப்படுத்தியதற்கு 2013 இழப்பீடு சட்டத்தின்படி மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடி தாரர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நீதிமன்றத்தில் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு எல்லைகள் அமைத்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்காக அளவீடு செய்ய அதிகாரிகள் வருவதாக தெரிந்து கொண்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
அதிகாரிகள் அளவீடு செய்ய வராததால் அங்கு விவசாயிகள் நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சி.பி.சி.எல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள்,நில உரிமை தாரர்கள்,சாகுபடி தாரர்கள்,கூலித் தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.