சமுதாய கூடத்தை தவறாக பயன்படுத்தும் ஊராட்சி நிர்வாகம்
திண்டுக்கல் அருகே ஊராட்சி நிர்வாகம் சமுதாய கூடத்தை தவறாக பயன்படுத்துவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Update: 2024-06-26 10:21 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேல்வார்கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடம் இருந்தும் அதை பயன்படுத்தாமல்,அவர்களது சொந்த வசதிக்காக வெள்ள பொம்மன் பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஊராட்சி அலுவலக பணிகளை ஊராட்சி நிர்வாகம் செய்துவருகிறது. பொதுமக்கள் சமுதாயக் கூடத்தை பயன்படுத்து முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் இதனால் ஊராட்சிக்கும் நிதி இழப்பு ஏற்ப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகம் செயல்படவும்,சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.