ஊராட்சி மன்ற தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம், உத்தமனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகனை அரிவாளால் வெட்டிய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-04-27 06:02 GMT

கைது செய்யப்பட்டவர்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதூர்உத்தமனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நல்லம்மாள். இவரது மூத்த மகன் சுகுமார் வயது 50 .சுகுமார் பிஜேபி கட்சியில் புள்ளம்பாடி ஓன்றிய மண்டல பார்வையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரான இவரது தாய் நல்லம்மாளுக்கு உதவியாக ஊராட்சி தொடர்பான பணிகளை சுகுமார் கவனித்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் குடிநீர் டேங்கில் உள்ள பழுதை நீக்கும் பணியில் பணியாளர்களை வைத்து சுகுமார் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராம்குமார் வயது 20 கார் ஓட்டுரான இவர் சுகுமாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

அப்போது ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்படவும் ஆத்திரமடைந்த ராம்குமார் அருவாளை எடுத்து சுகுமாரை வெட்டியுள்ளார். இதில் சுகுமாருக்கு லேசான காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் சுகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு பின் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர் .

Tags:    

Similar News