ஆத்தூர்: ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம் . ஒன்றிய குழு உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கி மகளிர் தினம் கொண்டாடினார்கள்.
Update: 2024-03-08 07:29 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 38 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகளிர்க்கு மகளிர் தின வாழ்த்துக்கள் இனிப்புகளுடன் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தார் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒன்றிய குழு பெண் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒன்றிய குழு தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.