ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா
சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஒன்றிய துவக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா.
Update: 2024-03-10 08:09 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நுாற்றாண்டு விழா, நுாற்றாண்டு நினைவு கொடிகம்பம் திறப்பு விழா, மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஊராட்சி துணைத் தலைவர் பரமேஸ்வரி துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிப் பேசினார். விழாவில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கென்னடி, தனபால், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ரவிக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.