பந்தநல்லூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் - பாமக வேட்பாளர்
பந்தநல்லூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என மயிலாடுதுறை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய பகுதிகளில் கடும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பந்தநல்லூர் புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு தொடர்ந்து அழகேசபுரத்திலிருந்து இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தொண்டர்களின் படை சூழ பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து பந்தநல்லூர் கடை வீதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் இந்திய ஜனநாயக கட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தொண்டர்களோடு இணைந்து வணிகர்கள் மத்தியில் பரப்புரையில் ஈடுபட்டனர் அப்போது பேசிய வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மக்கள் நிறைந்த பகுதியாக இருக்கக்கூடிய பந்தநல்லூர் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும், திருப்பனந்தாள் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடந்த வரும் நிலையில் நிச்சயமாக விரைவில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறினார்.