சிந்தாமணி மகா காளியம்மன் கோவிலில் பங்குனி பால்குட திருவிழா

சிந்தாமணி மகா காளியம்மன் கோவிலில் நடந்த பங்குனி பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-09 08:11 GMT
மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் 22 ஆம் ஆண்டு பங்குனி பால்குடம் திருவிழா நடைபெற்று வருகிறது. பால்குடம் திருவிழாவை முன்னிட்டு சிறுவர் ,சிறுமியர்கள் ,ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் ஏராளமானோர் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் பயபக்தியுடன் சாமியாடியும் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால் அம்மனுக்கு குடம் குடமாக ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பால்குடம் திருவிழாவை முன்னிட்டு சாஸ்தா அப்பளம் நிறுவனர் மணிகண்டன் பக்தர்களுக்கு நீர்மோர், தர்பூசணி ,பழம் கொடுத்தார்.
Tags:    

Similar News